ரணிலிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் தூக்கி வீசப்பட்டன!

கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய பல கடிதங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வீசப்பட்டுள்ளது.

அங்கு, வேலைவாய்ப்புக்காக வழங்கப்பட்ட சுய விபர கோவைகள் உள்ளடங்களாக பல கடிதங்கள் இவ்வாறு பரவி வீசப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. பிரதமரின் கிளிநொச்சி விஜயத்தின் பின்னர் இவ்வாறு பல கோரிக்கைகள் அடங்கிய கடிதங்கள் வீசப்பட்டுள்ளதுடன், அதில் மீள்குடியேற்ற அமைச்சருக்கு வாழ்வாதாரம் கோரியும், தமது கல்வி தகமைக்கமைய வேலைகளை பெற்று தருமாறு கோரியும் மக்களால் வழங்கப்பட்ட கடிதங்களும் காணப்படுகின்றது.

இந்நிலையில், தமது கோரிக்கைகளை அவர்கள் செவி சாய்க்காவிடினும் இவ்வாறு எமது கண் முன் கோரிக்கைகள் வீசப்பட்டுள்ளமை தொடர்பில் கவலை அடைவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்
இரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை
ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று 

About இலக்கியன்

மறுமொழி இடவும்