கோட்டாவின் வழக்கு 6 ஆம் திகதி விசாரணைக்கு!

அவன்காட் வழக்கிலிருந்து, தாம் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுதலை செய்யுமாறு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள மீள் பரிசீலனை மனு, எதிர்வரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென, மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (01), நீதிபதிகளான,குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜகத் சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக, சில தினங்களுக்கு முன்னர் ஜகத் த சில்வா குறிப்பிட்டிருந்ததற்கு அமைய, நீதிபதிகள் குழு முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் பொருட்டு மனு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கைக்குள் சீனா வருவதற்கு காரணம் இந்திய அரசின் தவறான அணுகுமுறையே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா
பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை
யாழ்.வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9மணியளவில், ஊரிக்காடு

About இலக்கியன்

மறுமொழி இடவும்