தொடங்கியது முற்றுகைப்போராட்டம்!

வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்களை விரட்ட நீரியல்வள அமைச்சருடன் பேசச்சென்ற சுமந்திரனின் நிலை தெரியாதுள்ள நிலையில் மீனவ அமைப்புக்கள் மருதங்கேணி பிரதேசசெயலகத்தை முடக்கி போராட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு தாழையடி .செம்பியன்பற்று, மாமுனை, நாகர்கோயில் பகுதிகளில் அத்துமீறி நிலைகொண்டுள்ள தென்னிலங்கை மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடில்களை அமைத்து தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்கள்.முறையற்ற வகையில் கடல் அட்டை பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களினை தட்டி கேக்கும் உள்ளூர் மீனவர்களிற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பிரதேச செயலக முற்றுகை போராட்டத்தை தாண்டியும் கடலட்டை பிடிப்பது தொடர்ந்தால், கடலட்டைக்கு அனுமதி கொடுத்த நீரியல்வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு இயங்கவிடாமல் போராடுவோமென மீனவ அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்