வடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா!

உரிமைக்காக போராடிய தமிழர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூகவிரோதிகள் என்று கூறிய கூத்தாடி ரஜினிக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக தமிழர் தாயகத்தின் வடமராட்சியில் ஒட்டப்பட்ட காலா திரைப்பட சுவரொட்டிகள் இளைஞர்களால் கிழிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, திக்கம், பொலிகண்டி, வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழித்து தொங்கவிடப்பட்டுள்ளது.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய
ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்

About மு.காங்கேயன்

1 comments

வடமராட்சி மண்ணில் கிழித்து தொங்கவிடப்பட்டது காலா! செய்தி படித்தேன். ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு இருக்கும் இன உணர்வும், தமிழ் உணர்வு ம் இம்மியளவும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இல்லையே என்பதை நினைக்கும் போது வெட்க்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.நன்றி.மு.புஷ்பராசன், பெங்களூர்.

மறுமொழி இடவும்

*