குடிவரவு , குடியகல்வு சட்டத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு , குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பு மற்றும் புலனாய்வு விசாரணை பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 19 பேர் சாஸ்திரம் கூறும் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் , மேலும் 6 பேர் விற்பனை நிலையங்களை நடாத்தி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் , மற்றைய இருவரும் வேறொரு விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு , குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

