மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியரைப் பாதுகாத்த கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர்.

கிளிநொச்சி இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 9ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை தனது பாட நேரத்தில் தனியாக அழைத்துச் சென்று அவரைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதே பாடசாலையில் கற்பிக்கும் வர்தக பாட ஆசிரியரான மோசஸ் கோகுலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காது கிளிநொச்சி லயன்ஸ் களக தலைவரும் எடிசன் கல்லூரி என்ற தனியார் கல்வி நிலைய இயக்குனருமான இ.ஜெயசுதர்சனது கோரிக்கைப்படி கிளாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கி பாதுகாத்துள்ள கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளரின் செயல் பெற்றோர் மத்தியில் கோபத்தை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த வாரம் கிளிநொச்சியில் இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 9ம் வகுப்பு மாணவி ஒருவரை அப்பாடசாலை வர்தக பாட ஆசிரியரான மோசஸ் கோகுலன் என்பவர் தனது பாட நேரத்தில் மறைவான ஓரிடத்திற்கு அழைத்து சென்று அங்கு அந்த சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி தன்னுடன் படுக்க வருமாறு கூறி மாணவியை நெருங்கிய வேளை சிறுமி பயத்தினால் அலறிய படி வெளியே ஓடிச்சென்று அதிபருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கூறி அழுது கதறியுள்ளார். தனது வீட்டுக்குச் சென்று மாணவியின் பெற்றோரிடமும் கூறி தான் இனி பாடசாலைக்குச் செல்லவில்லை என அடம்பிடித்து பாடசாலைக்குச் செல்லாது வீட்டில் நின்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் பாடசாலை அதிபரிடம் சென்று கோபப்பட்டதை தொடர்ந்து அதிபர் கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

வலயக்கல்விப்பணிப்பாளர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் மோசஸ் கோகுலனுக்கு நடவடிக்கை எடுக்க முயன்ற வேளை கிளிநொச்சி எடிசன் கல்லூரி தனியார் கல்வி நிலைய இயக்குனரும் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய ஆசிரியருமான லயன்ஸ் களக தலைவர் இ.ஜெயசுதர்சனும் புதுமுறிப்பு வித்தியாலய ஆசிரியர் க.சச்சிதானந்தசிவம் ஆகிய இருவரும் வலயக்கல்விப்பணிப்பாளரை தனியாகச் சந்தித்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய அழைத்த ஆசிரியர் தமக்கு வேண்டியவர் அவருக்கு கிளாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றம் வழங்கி பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதனை வலயக்கல்விப்பணிப்பாளர் முன்னம் மறுத்தாலும் சென்றவர்கள் அரசியல் பின்னணி பற்றிக் கூறிய போது வலயக் கல்விப்பணிப்பாளரால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் அவரை கிளாலி பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி லயன்ஸ் களக தலைவர் ஜெயசுதர்சன் இது பற்றி தமது எடிசன் கல்லூரில இதேபோன்ற எத்தினை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன அதை எல்லாம் தாம் மூடிமறைத்து உதவியுள்ளோம் அதோட ஒப்பிடேக்க இது ஒரு சிறு சம்பவம் இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது சாதாரண விடயம்தானே. இது பற்றி அறிவில்லாத நாகரீகமடையாத சில அதிபர்கள் இதை பெரிதாய் தூக்கி பிடிக்கிறார்கள் என்று கூறுகிறார்.

கிளிநொச்சியில் பாரதிபுர வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியர் மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முயன்ற சம்பவத்திற்கு நடவடிக்கை எடுத்த வலயக்கல்விப்பணிப்பாளர் அதேமாதிறி இந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என பெற்றோம் கோபப்படுகின்றனர்.
கிளிநொச்சி பாடசாலைகள் சிலவற்றில் இப்படியான பாலியல் பலாற்காரங்கள் பல இடம்பெற்று அரசியலாலும் உயர் அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் என்பதாலும் மூடிமறைக்கப்பட்டு வருகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு
நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று
மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*