தலைமையை நம்புங்கள்:விரைவில் தீர்வென்கிறார் துரை?

கட்சியின் தலைமைகள் பல கருத்துகளை முன் கொண்டு, சில முடிவுகளை எடுக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு நம்பிக்கை வைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்த, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், தெரிவித்துள்ளார்.

கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் தங்களின் முடிவுகளை சிறிய வட்டத்துக்குள் நின்று கொண்டுதான் முடிவுகள் எடுப்பார்கள். ஆனால், தலைமைகள் அவ்வாறு அல்ல. அவர்கள் பல கோணங்களில் சிந்தனை செய்து, பரந்துபட்ட தூரநோக்குடன், முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும்.

இன்று கூட்டுக் கட்சியென்பது, தமிழரசுக் கட்சிக்கு ஒரு சோதனை. இந்த சோதனையில் இருந்து தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத் திட்டத்தை வெற்றிகொள்வதுதான் சோதனையின் வெற்றியாகும்” என்று குறிப்பிட்டார்.

இன்றைய நிலையில், பல கட்சிகள் உடைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஆனால், தமிழரசுக் கட்சியை உடைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, சுரேஸஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் மாத்திரமே, இதுவரை பிரிந்து சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், எனவே, முடிவெடுப்பதில் தலைமைகள் அது நியாயப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் விடுதலையை வெற்றிகொள்ள வேண்டும் என்ற இலக்குடன் நாம், தியாகப் பயணத்தை முன்னெடுத்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும், அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்

தொடர்டர்புடைய செய்திகள்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் நெருக்கடிகள் ஏற்படும் நேரங்களில் நாம் ஆதரவை தெரிவிக்கின்றோம், ஆனால் அதற்கான பலனாக தமிழ்
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தரவாதம் வழங்கினால் பிரதமர் மஹிந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*