ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி – முடிவெடுத்துவிட்டதாக தமிழருவி மணியன் திருச்சியில் பேச்சு

நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டதாக ரஜினி கூறியதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

திருச்சியில் ரஜினிகாந்தை முன்னிறுத்தி காந்திய மக்கள் இயக்க மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது:

நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டதாக ரஜினி கூறினார். நடிகர் ரஜினிகாந்த் தூய்மையான அரசியல் துவங்க புறப்பட்டுவிட்டார். ரஜினிகாந்த்தை தமிழகம் தவறவிட்டால் தமிழகம் வாழ்வதற்கும் எழுவதற்கும் வழியில்லை. ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிப்பெற்று கோட்டையில் முதல்-அமைச்சராக அமரும் நாள் வரும். நிச்சயமாக அரசியலுக்கு வருவது என முடிவெடுத்து விட்டேன். இது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை என்று ரஜினி என்னிடம் சொன்னார்.

காவிரி பிரச்சினை உட்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளை 10 ஆண்டுகளில் தீர்த்து வைப்பதே என் முதல் கனவு என்றார் ரஜினி. ஊழலற்ற அரசை அமைப்பது தான் எனது 2-வது கனவு என்றார் ரஜினி. காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள் என ரஜினி கூறினார். நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறியுள்ளார். ரஜினியின் பெருந்தன்மை என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது. இரண்டு திராவிட கட்சிகளையும் தமிழகத்தில் இருந்து அகற்றவேண்டும் என்பது எனது சபதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்