தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் – வைகோ

தமிழக முதல்வர் பழனிசாமியை பதவி விலகக் கோரி நாளைய தினம் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வருக்கு எதிரான போராட்டத்தினை நடத்துவதற்கு பொலிஸார் அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் தடையை மீறி அறவழியில் நாம் போராட்டத்தினை நடத்துவோம் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து நலன்களையும் மத்திய அரசிடம் முதல்வர் ஒப்படைத்து விட்டதாக குற்றம் சுமத்திய அவர் அ.தி.மு.க அரசானது தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கர்நாடக அரசு மேகதூதுவில் அணை கட்டுவதற்கு எந்த வித எதிர்ப்பினையும் தமிழக அரசு முன்னெடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வைகோ தமிழகத்திற்கு முறைகேடாக நடந்து கொள்ளும் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்