அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு ஆறு மாத விடுமுறை!

வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சரான பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று வவுனியாவினில் கூடிய ரெலோவின் மத்திய குழுக்கூட்டத்தில் பா.டெனீஸ்வரனிற்கான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் உயர் மட்டம் இன்று 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடியிருந்தது.
வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தொடர்பாக முடிவெடுக்கவும் அரசியல் சூழ்நிலை தொடர்பிலும்; கலந்துரையாட இக்கூட்டம் நேற்று கூட்டப்படுவதாக இருந்தது.இறுதி நேரத்தினில் இக்கூட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ரெலோவின் தலைமைக்குழு கடந்த வாரம் கூடிய போது அமைச்சர் டெனிஸ்வரன் கலந்து கொண்டு விளக்கத்தையளித்தார்.

அவரிடம் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு கட்சி கோரியிருந்தது. ஆனால் தனக்கு ஒரு நாள் அவகாசத்தை கோரியிருந்தார்.
அவருடைய கோரிக்கைக்கு அமைவாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்கள் மூலமாக தான் சுய விருப்பத்துடன் பதவி விலக மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக ஒரு செய்தியை சொல்லி இருந்தார். கட்சி எனக்கு பெரியதில்லை என்ற நிலைப்பாட்டை கூறியிருந்தார்.
அனைத்து வடமாகாணசபையினில் அனைத்து அமைச்சுக்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையினில் தமிழரசுடன் பேச டெலோ முடிவு செய்துள்ளது.
இதற்கு ஏதுவாக தமிழரசு தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு விடுக்க ஏதுவாகவே பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்