27 இந்தியர்களை நாடுகடத்த இலங்கை முடிவு!

இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஒருவர் விஞ்ஞான பட்டதாரியாகவும், 19 பேர் ஜோதிடம் பார்ப்பவர்களாகவும், 8 பேர் வர்த்தக நடவடிக்கைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் பணிபுரிவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இந்தியர்கள் தொடர்ந்து குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுபடுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உளவு மற்றும் விசாரணை பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்