மன்னாரில் கழிவுப்பொருட்களை அகற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன்…

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரையில் பிளாஸ்ரிக் பொருட்கள் அதிகமாக கரை ஒதுங்கியுள்ளமையினால் மீனவர்கள் மற்றும் அங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் பல்வேறு அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று புதன் கிழமை (22.08.18) மாலை கீரி கடற்கரை பகுதிக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் 4 ஆம் ஆண்டு மாணவன் ஆர்.றொக்சன் குறித்த கடற்கரையில் கல ஆராய்வுகளை மேற்கொள்ள அங்கு சென்றிருந்தார்.

இதன் போது கீரி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி காணப்பட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் அனைத்து பிளாஸ்ரிக் பொருட்களையும் கண்டு வேதனை அடைந்ததோடு, தாமாகவே முன் வந்து குறித்த கழிவு பொருட்களை சேகரித்து ஒரு இடத்தில் குவித்துள்ளார். பின்னர் மன்னார் நகர சபையுடன் தொடர்பு கொண்டு தான் சேகரித்த கழிவுப்பொருட்களை அகற்றிச் செல்லுமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

குறித்த கீரி கடற்கரையில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமையினால் சுற்றுலாத்துரையின் வளர்ச்சி கேள்விக்குறியான விடையம் என குறித்த பல்கலைக்கழக மாணவன் கவலை தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்