சம்பந்தனுக்கு ஆனந்த சங்கரி சவால்!

அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரியே இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பானது கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வரலாற்று நிகழ்வாக நோக்கப்படுகிறது.

இந்நிகழ்வை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி, ”தமிழர்களின் ஒற்றுமை தொடர்பில் நான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை இன்று கிழக்கு மாகாணத்தில் செய்துள்ளார்கள். ஆனால், அந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பமற்ற நிலையிலேயே காணப்படுகிறது.

அதுமாத்திரமின்றி அரசியல் தீர்வு விடயத்தில் தொடரும் இழுத்தடிப்புக்கும் கூட்டமைப்பே உறுதுணையாக செயற்படுகிறது. அவர்கள் தமது கோரிக்கையினை சரியாக முன்வைப்பதில்லை. இந்நிலையில், அரசியல் தீர்வு தொடர்பில் முடிந்தால் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை வழங்கட்டும்” என சவால் விடுத்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்த கல்லூரி மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். தாய்லாந்திலிருந்து சென்னைக்கு
நெடுத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களது மூன்று
மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*