கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றில் வழக்கு!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நிதி மோசடியின் கீழ் இன்று(வெள்ளிக்கிழமை) விசேட மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தங்காலை – வீரக்கெட்டிய டீ.ஏ.ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது, அரசாங்கத்தின் 81 மில்லியன் ரூபா நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன், பிரசாத் ஹர்ஷான் டி சில்வா, உதுலாவதீ கமலதாச, கேமிந்த ஆட்டிகல, சமன் குமார கலப்பதி, தேவக மகிந்த சாலிய, ஶ்ரீமதி மல்லிகா குமார சேனாதீர ஆகியோர் வழக்கின் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, விசேட நீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரும் அதுபோன்றே விடுவிக்கப்பட வேண்டும் என்று
மட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்
வாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*