ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க முயற்சி – சசிகலா தரப்பு எதிர்ப்பு!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், மறைந்த அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க உள்ளதாக இயக்குனர் பாரதிராஜா தொடங்கி பல இயக்குனரும் அறிவித்துள்ள நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.

உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி உயிரிழந்தார் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் வலிமையான பெண்மணிகளில் ஒருவர் என கணிக்கப்பட்டவருமான ஜெயலலிதா. அவரது மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் அதிரடியாக பல சதிராட்டங்கள் நிகழ்ந்துவரக்கூடிய நிலையில், ஜெயாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக பாரதிராஜா, ஏ.எல் விஜய், பிரியதர்ஷினி உள்ளிட்ட இயக்குனர்கள் அறிவித்தனர்.

ஜெயாவின் பாத்திரத்தில் யார் நடிப்பது என நடிகைகள் தேர்வினை மேற்கண்ட இயக்குனர்கள் தமது தேடலை துவக்கிய நிலையில், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதனை அனுமதிக்க முடியாது என அறிவித்துள்ளார் ஜெயாவின் அண்ணன் மகன் தீபக்.

ஜெயாவின் ரத்த சொந்தங்களான தன்னிடமோ, தீபாவிடமோ, உற்ற தோழியான சசிகலாவிடமோ அனுமதி பெறாமல் ஜெயலலிதா குறித்து திரைப்படம் எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார் தீபக். சசிகலா தரப்புடன் தொடர்ச்சியாக நல்லுறவில் உள்ளவர் தீபக் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
ஆக கடைசியில இப்போது தனித்து விடப்பட்டுள்ளவர் டிடிவி தினகரன்தான் போலிருக்கிறது. கட்சியை இரண்டாக உடைத்து வெளியேறியபோது ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பி
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*