எந்தவொரு துறைமுகத்தையும் வெளிநாட்டுக்கு விற்கும் எண்ணம் இல்லை – மகிந்த

சிறிலங்காவின் எந்தவொரு துறைமுகத்தையும், எந்தவொரு வெளிநாட்டுக்கும் விற்கும் அல்லது கைமாற்றம் செய்யும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

”சிறிலங்காவில் உள்ள அனைத்து துறைமுகங்களும், துறைமுக அதிகார சபைக்கே சொந்தம்.

சில துறைமுகங்கள் வெளிநாட்டு முதலீடுகளுடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

அதுபோல, திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது,

இதன் அர்த்தம், துறைமுகத்தை வெளிநாட்டுக்கு வழங்குவது அல்ல.

ஆனால் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம், சிறிலங்காவின் துறைமுகங்களை ஏனைய நாடுகளுக்கு வழங்க இணங்கியிருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனைச் செய்யாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்