அதிரடிப்படை போதைபொருள் கடத்துகின்றது:சரத்பொன்சேகா!

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை போதை பொருள் கடத்தல்களுடன் தொடர்பிருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நேற்று வெளியிட்ட கருத்தினால் நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமது ஆதரவாளர்கள் பலர் அண்மையில் சோடிக்கப்பட்ட மற்றும் பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி லதீப் உள்ளிட்ட சில அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு உரையாற்றிய அவர், 2016ஆம் ஆண்டு உறுகொடவத்தையில், கைப்பற்றப்பட்ட கொக்கைன் கொள்கலனுடன், லதீப்பின் மைத்துனருக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

வத்தளவில் பாதாள உலக பிரமுகர் மஞ்சு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை குறித்து சிறப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

காவல்துறைக்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அதிக சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது. அதனை சில காவல்துறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே போதைபொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய அதிரடிப்படைக்கு விசேட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்