வடக்கு வீடமைப்புத் திட்டத்தை குழப்புகிறதா இந்தியா? – சிறிலங்காவிடம் கேள்வி எழுப்பியது சீனா

சீனாவினால் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்த 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதன் பின்னணியில், இந்தியாவின் தலையீடு இருந்ததா என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கேள்வி எழுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தை சீனா முன்னெடுக்கவிருந்த நிலையில், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.

இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இன்னமும் இந்தத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முடிவெடுக்காத நிலை காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையிலேயே, சீனாவினால் முன்னெடுக்கப்படவிருந்த வீடமைப்புத் திட்டத்துக்கு எதிராக வடக்கில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதன் பின்னணியில், அயல் நாடான இந்தியா இருந்ததா என்று சீனா தனது உயர் மட்ட இராஜதந்திர வட்டாரங்களின் ஊடாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்