கிளிநொச்சியில் பதற்றம்! யுவதி ஒருவரின் சடலம் மீட்ப்பு! கொலை எனச் சந்தேகம்!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகர் பிரிவுக்கு உட்ப்பட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் இன்று காலை சடலமாக இனம்காணப்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் இனங்கானப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு சுமார் இருபது வயது இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது சடலத்தின் முகப்பகுதியில் இடிபட்டு பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின் கொலையாகவும் இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும் குற்றத் தடகவியல் பொலிசாரையும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிசார் செய்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் உபகுழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டமையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின்
விடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*