விஷாலுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்.!

நடிகர்கள் அரசியலுக்கு வரும் காலம் போல இது. நீண்ட நெடுநாட்களாக அரசியலுக்கு வரக்கூடும் என கருதப்பட்ட ரஜினி, இவர் அரசியல் இயக்கமெல்லாம் தொடங்கமாட்டார் என கருதப்பட்ட கமல் ஆகியோர் தங்களுக்கென தனித்த அமைப்புகளை தொடங்கி உறுப்பினர்களை சேர்த்துவருகின்றனர்.

அதே வரிசையில் நடிகர் விஷாலும் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் ஓர் அமைப்பினை நேற்றைய தினம் தொடங்கியுள்ளார். இவர் சிறிது காலம் முன்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்தவர்.

இந்த நிலையில், விஷால் உள்ளிட்ட வேற்று மாநிலத்தவரின் அரசியல் வருகையை கடுமையாக சாடியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ” அமைப்புகளை தொடங்கட்டும். ஆனால், அரசியலில் பங்கெடுத்து எங்களை ஆள நினைப்பது தவறான விடயம். எங்கள் மண்ணுக்காக, மக்களுக்கான அரசியலை முன்னெடுக்க இங்கே எத்தனையோ நல்லோர்கள் இருக்கும் போது, மற்றவர்கள் எங்களை ஆள நினைப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று” என ஆவேசம் காட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்