வடக்கில் உள்ள இராணுவத்தை சாடிய செயிட் அல் ஹூசைன்!

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தனது கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் அவர், இலங்கை தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் காணிகளை விடுவிப்பதற்கு அர்ப்பணிப்பை கொண்டிருக்கின்றபோதும் இராணுவம் அதற்குக் கீழ்படிய மறுத்து வருகின்றது.

இதனால், இடம்பெயர்ந்த அப்பாவி மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருவதாக இன்றுடன் பதவியிலிருந்து விலகும் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல தசாப்தங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் தமது நிலங்களை விட்டு எழுப்பப்பட்ட மக்கள் இன்னமும் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்