முன்னாள் நீதியரசர் என்ற வகையிலேனும் விக்கிக்கு மதிப்பளிக்க வேண்டும்: சுரேஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் மீண்டும் ஐக்கியமாகி விடுவாரோ எனும் அச்சத்தில் தான் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை கூறிவருகிறார் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அண்மைக்காலமாக விக்னேஸ்வரன் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவலையளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் நீதியரசர் என்ற வகையிலேனும் விக்னேஸ்வரனிற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*