புதுடெல்லி பயணத்துக்கான அழைப்பை நிராகரித்தது கூட்டு எதிரணி

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறுவதற்கு, விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன நிராகரித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அடங்கிய குழு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில், எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம் 14ஆம் நாள் வரை புதுடெல்லியில் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தக் குழுவில் கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவும் சேர்க்கப்பட்டு, சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியை பிரதான எதிர்க்கட்சியாக ஏற்றுக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்கு வழங்காதமையைக் கண்டித்தே தினேஸ் குணவர்த்தன இந்த முடிவை எடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்