யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

காய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாணவன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக் கார­ணம் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

விஞ்­ஞான பீடத்­தில் பயி­லும் வவு­னி­யாவை சேர்ந்த விஜ­யேந்­தி­ரன் நிந்­து­ஜன் (வயது – 23) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
இவர் கோண்­டா­வில் கிழக்­கில் வீடு ஒன்­றில் தங்­கி­யி­ருந்து பயில்­கி­றார். சில நாள்­க­ளா­கக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டார். தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­போ­தும் அது பய­ன­ளிக்­க­வில்லை. யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்­சை­பெற நேற்­றுச் சென்­றுள்­ளார்.

அங்கு அவர் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­போது அவ­ருக்கு உடல்­பா­திப்பு கடு­மை­யாக இருந்­தமை தெரி­ய­வந்­தது. உட­ன­டி­யா­கவே அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுத் தீவிர சிகிச்சை வழங்­கப்­பட்­டது. எனி­னும் அது பய­ன­ளிக்­க­வில்லை. சில மணித்­தி­யா­லங்­க­ளில் அவர் உயி­ரி­ழந்­தார்.

அவ­ரது இத­யத்­தில் கிரு­மித் தொற்று ஏற்­பட்­டி­ருந்­த­தாக உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னை­யின்­பின்­னர் விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டது. திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்