அதிமுக பொதுச்செயலாளர் பாதவியிலிருந்து நீக்கப்படும் சசிகலா?

அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அக்கட்சியின் அவசர பொதுக் குழு கூடி பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என துணை ஒருங்கிணைப்பாளராக நியமன ஆகயுள்ள வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.

அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைந்துவிட்டன. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.

இதைத்தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பல நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்