தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் தொடர்ந்து எரியும் சமிக்ஞை விளக்குகள்!

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரதக் கடவையில் புதிதாக பொருத்தப்பட்ட ஒளிச் சமிக்ஞை விளக்குகள் கடந்த நான்கு மணிநேரத்திற்கும் மேலாக எரிந்து கொண்டிருப்பதால் மக்கள் அச்சத்துடன் பயணத்தினைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒளிச் சமிக்ஞை விளக்குகள் இன்று (திங்கட்கிழமை) காலையில் இருந்து தொடர்ச்சியாக ஒளி எழுப்பி இயங்கிக் கொண்டிருப்பதால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்யும் மக்கள் புகையிரதம் வருகின்றது என்ற அச்சத்தில் பயணத்தை தொடருவதில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசாங்க அதிபர் மற்றும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நிலமையை பார்வையிட்டுள்ளதுடன், அப்பகுதியில் போக்குவரத்து பொலிசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்கு செய்தனர்.

தொடர்ந்தும் ஒளிச்சமிஞ்சை இயங்கு நிலையில் இருப்பதால் புகையிரதத் திணைக்களத்தின் வடக்குக்கான பிரதான கட்டுப்பாட்டு பிரிவான அனுராதபுரம் புகையிரத திணைக்களத்திற்குத் தெரியப்படுத்த அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்