சசிகலாவுக்கு எதிராக பேசிய வைத்திலிங்கம் எம்.பி. அதிமுகவிலிருந்து நீக்கம்

கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதால் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. இரு அணிகள் நேற்று இணைந்தபோது வைத்திலிங்கம் எம்.பி.க்கு ஒருங்கிணைப்பு குழுவில் துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு வைத்திலிங்கம் கூறுகையில், “பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

இதற்கிடையே சசிகலாவை பற்றி கருத்து தெரிவித்த வைத்திலிங்கம் எம்.பி.யை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதால் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் எம்.பி. நீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

சசிகலா ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்துள்ள வைத்திலிங்கம் எம்.பி., “என்னை கட்சியில் இருந்து நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்