பதவிகளை ஒரு நாள் தன்னிடம் வழங்குமாறு சினிமா பாணியில் சம்பந்தனுக்கு, சங்கரி சவால்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எவ்வித பதவிகளையும் வகிக்க தகுதியற்றவர் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே, அவர் வகிக்கும் பதவிகளை ஒரு நாள் மாத்திரம் தன்னிடம் ஒப்படைத்தால் அதனூடாக எவற்றை செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டுவதாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பான சவாலை விடுத்தார்.

மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது விஞ்ஞாபனத்தில், “விடுதலை புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அவர்களை தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு அன்று அந்த தேர்தலில் வெற்றி பெற்று 22 பேர் நாடாளுமன்றத்திக்கு சென்றனர். ஆனால் அவர்கள் துளியேனும் இனப்பிரச்சினை பற்றி பேசவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்