விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட கடிதத்தை கிழித்தெறிந்த கலைஞர்?

விடுதலைப் புலிகளின் தலைமையால் மறைந்த, தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிழித்தெறியப்பட்டதாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூறிய ம.தி.முகவின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி தற்பொழுது தி.மு.கவுடன் இணைந்து செயற்படுவதாக பலராலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

நான் விடுதலைப்புலிகளை நேற்றைக்கு ஆதரித்தேன், இன்றைக்கும் ஆதரிக்கிறேன், நாளைக்கும் ஆதரிப்பேன் என நீதிமன்றத்தில் தீர்க்கமாக தெரிவித்தவர் வைகோ.

தேர்தல் அரசியலில் திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டு வைத்த போதிலும் விடுதலைப்புலிகளையும், ஈழத்தையும் ஆதரிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவரும் வைகோ கடந்த 1989ல் ஈழத்துக்கு சென்று புலிகளின் தலைமையை சந்தித்து வந்தார்.

அந்தக் காலத்தில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமை ஓர் கடிதம் கொடுத்தனுப்பியதாக வைகோவால் கூறப்பட்டிருந்தது. அந்த தகவலை தகவல்களை சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் வைகோ பகிர்ந்தார்.

அக்கடிதத்தில் வைகோவின் ஈழ பயணம் குறித்தும், இந்திய அமைதி படையின் அத்துமீறல்கள் குறித்தும், தமிழக – இந்திய அரசியல் சூழல்களை அவதானித்து ஈழம் குறித்த விழிப்புணர்வினை தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் வைத்து மேற்கண்ட கடிதத்தை வெளியிட்ட வைகோ, கடிதத்தை தாம் கருணாநிதியிடம் கையளித்ததாகவும் அவர் பின்னாளில் குறிப்பிட்ட அந்த கடிதத்தை அழித்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் பகிர்ந்துள்ளார்.

வைகோவின் ஈழ பயணத்திற்கு பின்னரே அவர் திமுகவிலிருந்து விலக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் தற்போது பல அரசியல் நகர்வுகளுக்கு பின்னர் திமுகவுடன் மீண்டும் இணைந்து செயல்பட்டுவருவது விசனங்களைத் தோற்ருவித்திருப்பதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்