குச்சவெளியில் நாளை இறுதிக்கட்டப் போர் ஒத்திகை

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில், முப்படைகளும், வெளிநாட்டுப் படையினரும் இணைந்து பங்கேற்று வரும், நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் இறுதி தாக்குதல் ஒத்திகை நாளை திருகோணமலை குச்சவெளி கடற்கரையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகிய நீர்க்காகம் -9 கூட்டுப் பயிற்சி நாளை நிறைவடையவுள்ளது.

நாளை குச்சவெளியில் நடக்கவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகையில், சிறிலங்காவின் 2500 இராணுவத்தினர், 400 கடற்படையினர், 200 விமானப்படையினரும், பங்களாதேஷ். சீனா, இந்தோனேசியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துருக்கி, சாம்பியா, ஆகிய நாடுகளின் படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

சிறப்பு நடவடிக்கைப் படைகளின் போரிடும் திறனை உயர்த்தும் வகையில் இந்தப் பயிற்சி இடம்பெறும் என்று, மேஜர் ஜெனரல் நிசங்க ரணவான தெரிவித்தார்.

இதற்கிடையே குச்சவெளியில் நாளை மேற்கொள்ளப்படவுள்ள இறுதிக்கட்ட தாக்குதல் ஒத்திகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து சிறிலங்கா இராணுவத் தளபதி ஆராய்ந்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*