கருணாநிதியை இன்று சந்திக்கவுள்ள வைகோ – காரணம் என்ன?

தி.மு.க. தலைவர் கருணாநிதியை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை சந்திக்க உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி சமீபத்தில் உணவு குழாய் மாற்று சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது பிறந்த நாளையொட்டி கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அவரது உடல் நலமும் விசாரித்தார். இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். அவருடன் திருப்பூர் துரைசாமி மற்றும் ம.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் செல்கிறார்கள்.

2015-ம் ஆண்டு அருள்நிதி திருமணத்தின் போது கருணாநிதியை வைகோ சந்தித்தார். சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரை சந்தித்து உடல் நலம் விசாரிக்க வைகோ சென்றார். அப்போது தி.மு.க. தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வைகோ கருணாநிதியை சந்திக்காமல் திரும்பி விட்டார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்
இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
விஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி

About இலக்கியன்

மறுமொழி இடவும்