பிரான்சில் கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017

தமிழர் விளையாட்டுத்துறை நடாத்திய கேணல் பரிதி நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப்போட்டி 2017 கடந்த (20.08.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு Chateau de vincennes பகுதியில் சிறப்பாக இம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 26.12.2007 நெடுந்தீவுக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.

20 துடுப்பெடுத்தாட்ட அணிகள் இப்போட்டியில் கலந்துகொண்டன.
1ஆம் இடம் ஸ்கந்தா விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் எழுச்சி விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் ஏர்கன் விளையாட்டுக் கழகம்

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்