ஒட்டுசுட்டான் வெடிபொருள் மீட்பு – கைதான 7 பேர் விடுதலை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒட்டுசுட்டானில் முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து கடந்த ஜூன் மாதம், விடுதலைப் புலிகளின் கொடி, சீருடை, கிளைமோர் போன்றன கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த, 19 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, நேற்று முல்லைத்தீவு நீதிமன்றினால் விடுதைலை செய்யப்பட்டனர்.

ஏனைய 12 பேரையும், ஒக்ரோபர் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்