பீலபெலட் நகரில் ‘சலங்கை நாட்டியாலயம் அகடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு.

20.10.2018 அன்று பீலபெல்ட் நகரில் சிறப்பாக இயங்கிவரும், சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்வு விழா, கோலாகலமாக நடைபெற்றது.

விழாவினிற்கு பீலபெல்ட் நகரமக்களும், அதற்கண்டிய நகர மக்களும் உவகையுடன் வருகைதந்து, மண்டபம் நிறைந்த மக்கள் சூழ, சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் 10வது ஆண்டு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

மூன்று வயது தொடக்கம், 23வயது வரையுள்ள மாணவ மாணவிகள் நடனங்கள், நாட்டியங்கள் மூலம் தங்களது உச்சத் திறமைகளை வெளிப்படுத்திப் பார்வையாளர்களின் சிறப்பான பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

இவ்விழாவில் சலங்கை நாட்டியாலயம் அக்கடமியின் அதிபர், கலைமாமணி திருமதி. பிரீடா பிரபாகரன் அவர்களின், தன்னலமற்ற நடனச் சேவையைப் பாராட்டி, Oriental Examination Board London ஒன்று கூடி, அதன் தலைவர் ஞானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்களால்
‘ நாட்டிய கலா பூஷணம்  என்ற கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

நடனம் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் பெருமுயற்சியால் இவ்விழா மிகச் சிறப்பாகவும், நிறைவாகவும் நடந்தேறியது என்பது குறிப்பிடத் தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்