தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோரும் ஐ.தே.க

பாராளுமன்றத்தில் தமக்கே அதிக பெரும்பான்மை ஆசனம் இருக்கின்றது என்பதனை நிரூபிக்க முடியுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கமைய பிரதமராக ஒருவர் பதவி வகிக்கும் நிலையில் அவர் பதவி விலகாது புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது எனவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டியே மற்றையவர்களுக்கு பிரதமராக முடியுமெனவும் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி தமக்கு பெரும்பான்மையை காட்ட முடியுமென அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதுடன் பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருவாதகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்