அரசியலமைப்பின் பிரகாரம் செயலாற்றுங்கள்: ஐரோப்பிய ஒன்றியம்

அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இன்று (சனிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை சுட்டிக்கட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் இலங்கையின் அரசியல் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில, அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுமாறும், அசம்பாவிதங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதுடன், பொது ஸ்தாபனங்கள் மற்றும் ஊடகங்களுக்கு காணப்படும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம்
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி
பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்

About இலக்கியன்

மறுமொழி இடவும்