20 நாடுகளின் தூதுவர்கள் அலரி மாளிகையில் ரணிலுடன் சந்திப்பு

ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, உள்ளிட்ட 20 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாலக ரத்நாயக்க ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.

இதன் போது அரசியலமைப்பு ரீதியாக தானே பிரதமராக இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தமக்கு இருப்பதாகவும், அதனால் தான் தாம் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் திரும்பத் திரும்ப கேட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தச் சந்திப்பில் சீனத் தூதுவர் சென் ஷிய யுவான் பங்கேற்கவில்லை என்பதும், அவர் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம்
இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளில் பௌத்தமதத்திற்கே முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று காலை கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை
வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட சிறீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்