புதிய அமைச்சரவையில் நிதி, பொருளாதார விவகாரங்களை வசப்படுத்தினார் மகிந்த

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் நடக்கும் இந்த பதவியேற்பு நிகழ்வில், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா பதவியேற்றுள்ளார். புதிய வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களான விஜேதாச ராஜபக்சவுக்கு கல்வி உயர்கல்வி அமைச்சர் பதவியும், வசந்த சேனநாயக்கவுக்கு சுற்றுலத்துறை மற்றும் வன வாழ் உயிரினங்கள் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களான ஆனந்த அளுத்கமகே, சுற்றுலாத்துறை மற்றும் வன வாழ் உயிரினங்கள் பிரதியமைச்சராகவும், வடிவேல் சுரேஷ், பெருந்தோட்டக் கைத்தொழிற்றுறை இராஜாங்க அமைச்சராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து விவகார அமைச்சராக, ஈபிடிபியின் டக்ளஸ் தேவானந்தா, நியமிக்கப்பட்டுள்ளார்.

மகிந்த சமரசிங்க – கப்பல் துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்

மகிந்த அமரவீர – விவசாய அமைச்சர்

ரஞ்சித் சியம்பலாபிட்டிய – மின்வலு மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்

விஜித் விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள கிராமிய அபிவிருத்தி அமைச்சர்

பைசர் முஸ்தபா – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

ஆறுமுகம் தொண்டமான் – மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு செல்வபுரம் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது முல்லைத்தீவுச் செய்தியாளர் கூறுகின்றார். குறித்த
எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கே வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப்
மட்டக்களப்பில் இன்றைய தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலும், மக்கள் சந்திப்பும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*