நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க 800 மில்லியன் வழங்கியதா சீனா?

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க, மகிந்த ராஜபக்சவுக்கு சீனா பெருமளவு நிதியைக் கொடுப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறிய குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

“இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. பொறுப்பற்றது.

ஒரு அயல் நட்பு நாடு என்ற வகையில், சிறிலங்காவின் மாற்றங்களை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இது ஒரு உள்நாட்டு விவகாரம், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை சீனா தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க தேவையான திறமைகளையும் வழிகளையும் சிறிலங்காவின் அரசாங்கம், கட்சிகள் மற்றும் மக்கள் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்” என்றும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க 800 மில்லியன் ரூபா வரை கொடுக்கப்படுவதாகவும், இதற்காக, மகிந்த ராஜபக்சவுக்கு சீனா நிதி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தார்.

இதனை நிராகரித்திருந்த சீன தூதரக அதிகாரிகள், ஐதேக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுடனும் சீனா நல்லுறவை வைத்திருப்பதாக கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக, சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன
மீண்டும் தெற்கிலிருப்பவர்கள் கறுப்பு ஜீலை பற்றி பேசுவது மக்கள் பிரதிநிதிகளிற்கான பண்பு அல்லவென டெலோஅமைப்பின் செயலாளர் நாயகம் சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை அமைக்கத் தவறினால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் என்று தமிழ்த்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*