அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியலில் நிலவும் குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சம்பந்தனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் நிலையான தீர்வொன்று காணப்படாமல் உள்ளது.

குறிப்பாக பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பிரதமர் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தமது ஆதரவு குறித்து வெளிநாடுகளுடன் கலந்தாலோசித்தே தெரிவிக்க முடியும் என ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்ததது. அந்தவகையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்