சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன் – ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக தகவல்!

தாம் அதிகாரத்தில் இருக்கும் வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த சந்திப்பின் போதே அவர் சமஷ்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளதாகவும், தான் இருக்கும் வரை அந்த கனவு நிறைவேறாது என்றும் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில், ” நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.

ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்