மகிந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ள சரவணபவன்?

தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்பொருட்டு சரவணபவன் எம்.பி, கடந்த சில நாட்களாக மகிந்த தரப்புடன் தீவிர பேச்சில் ஈடுபட்டுவந்துள்ளமை அறியமுடிந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்சவின் நேரடி முயற்சியில்,சரவணபவனுடன் நீண்ட பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.

இதன்போது அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பாக பேசப்பட்டதாகவும் அரசில் இணைந்தால் தனது பிரசன்னத்தில் அரசியல்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் ஏற்படும் கறையை நீக்கலாமென்றும் சரவணபவன் பேச்சு நடத்தியுள்ளார். தனது பத்திரிகை மூலமாக இலகுவில் தன்மீதன கறையை நீக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு சு.க தரப்பிலிருந்து பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்துடன் தொடர்புடைய கபினெட் அமைச்சொன்றை சரவணபவன் கோரியுள்ளபோதும், மஹிந்த தரப்பு அதை வழங்க சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. அடுத்து வரும் நாட்களில் மஹிந்த முகாமிற்கு தாவவுள்ள முஸ்லிம் கட்சி தலைவர் ஒருவரிற்காக அந்த அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், குறித்த தமிழரசுக்கட்சி எம்.பிக்கு இராஜாங்க அமைச்சொன்றே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இராஜாங்க அமைச்சை ஏற்றுக்கொள்ள சரவணபவன் தயாராக இல்லை எனவும் இதனாலேயே அவருக்கு ஒதுக்கப்படும் அமைச்சு பதவி குறித்த சர்ச்சையே தற்போது நீடித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த இழுபறியால் சரவணபவனது கட்சிதாவல் தாமதமடைந்துவருவதாகவும் குறிப்பிட்ட கபினெட் அமைச்சு கிடைக்காத பட்சத்தில், மஹிந்த தரப்பை ஆதரிக்கமாட்டேன் என சரவணபவன் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
இவர்கள் கொழும்பில் பணத்திற்கும் வணிகத்திற்கும் பேச்சுவார்த்தை நடாத்துவார்கள். இவர்கள் வடகிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டியை ஆகியவற்றை கைவிட்டவர்கள். வெளிநாட்டு இராஜதந்திரிகளை
விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*