கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து எந்தவொரு அமைச்சுப்பதவிகளையும் பெற்றதில்லை.

இந்தநிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சு பதவியினை பெறும் முதல் சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்