ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு

“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நேற்று எனக்குச் சொன்ன எதனையும் ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றத்தில் செய்யவில்லை.

அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று. அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.” இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர், சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணத்தை
தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க அடுத்­த­ வா­ரம், இரண்டு ஐரோப்­பிய நாடு­க­ளுக்­கான பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்­ளார். ஜேர்­மனி, பின்­லாந்து ஆகிய
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து அதிகாரங்களையும் தற்போது தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்