த.தே.கூட்டமைப்பை இன்றும் சந்திக்கும் மைத்திரி

காணி விடுவிப்புக்களில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் படைத் தளபதிகள், சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையிலான சந்திப்பு இன்று பி.ப.4.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரைப் பங்கேற்குமாறு அரச தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரச தலைவருக்கும் இடையே நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பிலேயே இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்