வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

நவம்பர் 19-ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 9.00 மணியளவில் முள்ளியவளை மாஞ்சோலைப்பகுதியில் வீதியால் சென்ற தம்மை வழிமறித்த போலிசார் தம்மை நீராவிப்பிட்டிப்பகுதிக்கு சென்று கஞ்சா வாங்குமாறும், அதற்போது தாங்கள் அவர்களை கைதுசெய்யுமாறும் பணித்ததாகவும் தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள், தாங்கள் அதனை செய்ய மறுத்துவிட்டதால் மிக மோசமாக தங்களை தாக்கியதாகவும் குறிப்பிட்டனர்.

பொலிசாரின் இந்த சித்திரவதைகளுக்கு 32 அகவையுடைய க.டிசாந்தன், 27 அகவையுடைய தேசங்கராசா அனிதரன், 28 அகவையுடைய மங்களேஸ்வரன் மயூரன் ஆகியோரே பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாரை தொடர்புகொண்டு கேட்க மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை பயனளிக்கவில்லை.

எவ்வாறாயினும் முல்லைத்தீவு பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் தாங்கள், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதுடன், தேசிங்கள் அனிதரனின் காதாலும் மூக்காலும் இரத்தம் வடிந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்