தெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்?

நாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனைய பெரும்பான்மையின கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமித்துள்ள நிலையில் ஜக்கிய தேசயிக்கட்சியோ தனக்கு கூடிய உறுப்பினர்களை தருமாறு கோரியுள்ளது.

இதனிடையே கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் அடுத்த தேர்தலில் ஜக்கிய தேசியக்கட்சியால் இடம் வழங்கப்படவுள்ளதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன் அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடமாட்டார். அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும். அதனாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.

அவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே முயற்சிக்கிறார்.

அதேநேரம் ஜேவிபியும் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடவிருக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள்
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்
மக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

About இலக்கியன்

மறுமொழி இடவும்