யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் வணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர் தினம் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் அனைத்துப்பீடங்களையும் சேர்ந்த மாணவர் ஒன்றியங்களும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழீழ மாவீரர் நினைவிடத்தை மையப்படுத்தி மாவீரர் நினைவு வளாகம் அமைக்கப்பட்டு, வளைவுகள் கட்டப்பட்டு மாவீரர் புனிதப் பிரதேசம் போன்று ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.

பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்