வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கு நினைவேந்தல்

வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது. இன்று மாலை மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் இந்த நிகழ்வை உணர்வெழுச்சியுடன் முன்னெடுத்தனர்.

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறையில் உள்ள தீருவில் வெளியில் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிகளின் நினைவிடம் உள்ள இடத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மாவீரர்களான தமது பிள்ளைகளின் திருவுருவப் படங்களை வைத்து மலர் மாலைகள் சூட்டி தீபமேற்றி வணக்கம் செலுத்தினர். இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தமது பிள்ளைகளுக்கு கண்ணீருடன் வணக்கம் செலுத்தினர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்