கூட்டுப்படைகளின் பிரதானி ரவீந்திர கைது!

நீதிமன்றத்தில் ஆஜராகிய கூட்டுப்படைகளின் பிரதானியான அத்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து நீமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு தடவைகள் உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து இன்று காலை நீதிமன்றில் ஆஜரான அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்